தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகளின் வகைகளை அறிந்துகொள்ளும் விதமாக கடந்த ஆண்டுமுதல் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2 வது ஆண்டாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று காலை தொடங்கியது.
முன்னதாக நேற்று பண்ணாரியில் நடைபெற்ற கணக்கெடுப்பு பயிற்சியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன்படி இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அதிநவீன கேமராக்கள், பைனாகுலர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.