ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலம் அருகே ஆற்றங்கரையை ஒட்டி, பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கெனவே தெற்குப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து தற்போது ரூபாய் 40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கோயிலின் தெற்குப் பிரகார சுவர் முழுவதும் இடிந்து விழுந்து அப்பகுதியில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.