தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! - Sunday holiday

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்த பெற்ற ஈரோடு சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று (மார்ச் 27) ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஞாயிறு  விடுமுறை என்பதால் பண்ணாரிகோவிலில் குவிந்த பக்தர்கள்!
ஞாயிறு விடுமுறை என்பதால் பண்ணாரிகோவிலில் குவிந்த பக்தர்கள்!

By

Published : Mar 27, 2022, 8:11 PM IST

ஈரோடு:தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் விழா கரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

நோய் தொற்று குறைந்ததால் இந்த வருடம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து கோவிலில் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றன. நாளை திங்கள்கிழமை மறுபூஜை நடைபெற உள்ளது. இன்று விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஏரளாமானோர் கோவிலுக்கு வந்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கர்நாடகத்தில் இருந்த வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மன் தரிசனம் செய்தனர்.

பெண் பக்தர்கள் வேல் ஏந்தியபடி கோவிலை சுற்றிவந்தனர். மாடு, குதிரை வளர்போர் குண்டம் முன் பூஜைகள் செய்து அழைத்துச் சென்றனர். பண்ணாரி குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் காணிக்கை 93 லட்சம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு விடுமுறை என்பதால் பண்ணாரிகோவிலில் குவிந்த பக்தர்கள்!

இதையும் படிங்க:'உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும்' - மதுரை மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details