ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
இன்று(பிப்.6) நடந்த ஏலத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூவன், செவ்வாழை, தேன்வாழை உள்ளிட்ட 1,890 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வாழைத்தார்களை ஏலம் எடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலத்தில் கதலி வாழை தார் ரூ.18க்கும், நேந்திரன் வாழை தார் ரூ.15க்கும், தேன்வாழை தார் ரூ.460க்கும், செவ்வாழை தார் ரூ.610க்கும், பூவன் வாழை தார் ரூ.330க்கும், ரஸ்தாலி வாழை தார் ரூ.480க்கும், ரொபஸ்டா வாழை தார் ரூ. 315க்கும், மொந்தன் வாழை தார் ரூ. 180க்கும், பச்சை நாடன் வாழை தார் ரூ.275க்கும் ஏலம் போனது.
மொத்தம் 1,890 வாழைத்தார்கள் ரூபாய் 4.15 லட்சத்திற்கு விற்பனை ஆனது. செவ்வாழை, ரஸ்தாளி, தேன்வாழை ரக வாழைத்தார்கள் நல்ல விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: வேளாண் துறைக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்கத் திட்டம் - நிர்மலா சீதாராமன்