சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கான்கிரீட் மூலம் செய்யப்பட்ட எடை குறைவான படகை வடிவமைத்தனர். மும்பையில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச படகு வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
குறைந்த எடையில் கான்கிரீட் படகு - கல்லூரி மாணவர்கள் சாதனை! - Light weight boat
ஈரோடு: குறைந்த எடைகொண்ட படகை வடிவமைத்து பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அமெரிக்காவில் பரிசுகளைப் பெற்று அசத்தியுள்ளனர்.
இந்த சர்வதேச படகு வடிவமைப்புப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையையும் இந்த அணி பெற்றது. 25 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் தாங்கள் வடிவமைத்த எடை குறைவான இலகு ரக படகை அங்குள்ள ஏரியில் இயக்கிக் காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் படகு வடிவமைப்பிற்குப் பரிசாக 1,500 டாலரும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஒரு லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படகை, 42 மாணவர்கள் தொடர்ந்து 17 மணி நேரம் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.