சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாக்கம்பாளையம், அருகியம், கடம்பூர் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து இயக்குவது கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டது. தற்போது கடம்பூர் முதல் அருகியம் வரை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில், அருகியத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் புறப்பட்ட அரசுப் பேருந்து மாமரத்துத்தொட்டி என்ற இடத்தில் இருந்த குழியில் சிக்கி நின்றதால் பேருந்து தொடர்நது இயக்கமுடியாமல் ஓட்டுநர் சிரமத்துக்குள்ளானார்.