ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு மாலை நான்கு மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்குமிடையே டைமிங் தகராறு ஏற்பட்டது.
பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சண்டை: ஸ்தம்பித்த போக்குவரத்து! - ஈரோடு
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இரண்டு தனியார் பேருந்துகளை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு பேருந்தை முந்திச் சென்று சாலையின் நடுவே வழிமறித்து சண்டையிட்டனர். இதன் காரணமாக சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை எடுக்குமாறு கூறியதோடு, சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்தி சண்டையிட்ட ஓட்டுநர்களை எச்சரித்தனர். இதனால் சத்தியமங்கலம் - கோவை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.