சத்தியமங்கலத்தில் உள்ல புலிகள் காப்பகம், பண்ணாரி, திம்பம், பவானிசாகர் வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள், தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்கின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானைகள் அரைமணி நேரம் முகாமிட்டு இருந்தன.
சாலையில் திரியும் யானைகள்: போக்குவரத்து நெரிசல் - சத்தியமங்கலம் யானைகள் செய்திகள்
சத்தியமங்கலம்: தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தால் புலிகள் காப்பகம், பண்ணாரி, திம்பம், பவானிசாகர் வனப்பகுதியில் சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் யானைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![சாலையில் திரியும் யானைகள்: போக்குவரத்து நெரிசல் சாலையில் திரியும் யானைகளால் போக்குவரத்து பாதிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5401161-thumbnail-3x2-elephent.jpg)
சாலையில் திரியும் யானைகளால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் திரியும் யானைகளால் போக்குவரத்து பாதிப்பு
இதன் காரணமாக தமிழ்நாடு - கர்நாடக சாலைகளுக்கு இடையே பயணிக்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்தன. தகவலறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை விரட்டினர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. யானைகள் சாலையின் குறுக்கே நடமாடியதால் அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிக்க:தொடக்கப் பள்ளியை திணறவைத்த காட்டு யானைகள் Published on :8 hours ago