சத்தியமங்கலம் அடுத்த உள்ள பவானிசாகர் அணை கட்டுமான பணியின்போது கட்டுமானப் பொருள்கள் எடுத்து செல்வதற்காக பவானிஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அணை முழுகொள்ளளவை எட்டும்போது 8 மதகுகள் வழியாக திறந்து விடப்படும் வெள்ளநீர், இந்த பாலத்தின் வழியாக பாய்ந்து ஓடும்.
இந்த ஆற்றுப்பாலம் பழுதடைந்தததால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாகனப் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது. இதனால் வாகனங்கள் தொட்டம்பாளையம் ஆற்றுப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டதால் புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பவானிசாகர் செல்ல பலகிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.