தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் பண்ணாரி கோயில் வளாகம்

பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பண்ணாரி கோயில் வளாகம்
பண்ணாரி கோயில் வளாகம்

By

Published : Aug 3, 2021, 10:16 AM IST

ஈரோடு : ஆடி பதினெட்டாம் பெருக்கு தினமான இன்று கரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோயில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பண்ணாரி கோயில் வளாகம்
பண்ணாரி கோயில் வளாகம்

இதே போல் பவானிசாகர் அணை பூங்காவும் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அணை பூங்கா முன் மீன் விற்பனை கடைகள் செயல்பட இரு நாட்களுக்கு பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க :'கண்டு ரசிக்க... பரந்துவிரிந்த ரோஜா பூங்காவைத் திறங்க!'

ABOUT THE AUTHOR

...view details