தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் ஒழிப்பு: புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்ற மாணவர்கள்! - book shop record

ஈரோடு: கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பையை தயாரித்து புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளனர்.

college students

By

Published : Sep 8, 2019, 11:59 PM IST

தமிழ்நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என சுற்றுச்சூழல் துறை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை நீடித்து வருகிறது.

துணிப்பையை தயாரிக்கும் மாணவர்கள்

இந்நிலையில், பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 500 பேர் புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற ஒரே நேரத்தில் 250 குழுக்களாக பிரிந்து எழுதில் மக்கக்கூடிய பருத்தியால் ஆன கைப்பைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்மூலம் நூறு ரூபாய் செலவில் பிளாஸ்டிக் அல்லாத கைப்பைகளை தயாரிக்க இயலும், வீட்டிலிருக்கும் குடும்ப பெண்கள் ஐந்து மணி நேரத்தில் இதனை தயாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக துணிப்பையில் ஆன பொருட்களை பயன்படுத்துமாறு கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details