தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது ஊரடங்கு தளர்வு: வாகன ஓட்டிகள் 222 பேர் மீது வழக்குப்பதிவு! - Sathiyamangalam Police Case File

பொது ஊரடங்கு நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் விதியை மீறியதாக 220 வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் 222 பேர் மீது வழக்குப்பதிவு!  ஈரோடு வாகன ஓட்டிகள் 222 பேர் மீது வழக்குப்பதிவு  சத்தியமங்கலம் வாகன ஓட்டிகள் 222 பேர் மீது வழக்குப்பதிவு  Sathiyamangalam Police Case File  Erode Police Case File  Sathiyamangalam Police Case File  Two Wheeler Case File
Sathiyamangalam Police Case File

By

Published : May 5, 2020, 12:10 PM IST

பொது ஊரடங்கு நேற்று முதல் தளர்த்தப்பட்டதால் சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடித்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நோய் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம், வடக்குப்பேட்டை , கோட்டுவீராம்பாளையம் உள்ளிட்ட எட்டு இடங்களில் காவல் துறையினர் இரட்டைத் தடுப்பு முறையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று புதிய பாலம் சந்திப்பில் முகக்கவசம், தலைக்கவசம் போன்ற நோய்த் தடுப்பு விதிகளை மீறியதாக 220 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் பயணித்த 30 இளைஞர்களை எச்சரித்து அனுப்பினர்.

சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்ட தினச்சந்தையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர். மேலும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத 10 காய்கறிகடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

இறைச்சி கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் மீன் விற்பனையாளர்கள் மீன்களை சுத்தம் செய்து தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதை மீறி மீன்களை சுத்தம் செய்து தரும் கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:'டாஸ்மாக்கை மூடி மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்' - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details