தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது காதலியை கவர தோகை விரித்து அழகுற ஆடிய மயில்! - Peacock Dance

​​​​​​​ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் அணையில் தண்ணீரைத் தேடி நீர்த்தேக்கப்பகுதிக்கு இரை தேடி வந்த மயில்களில், ஆண் மயில் ஒன்று தோகை விரித்து அழகுற நடனமாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

peacock-dance

By

Published : May 2, 2019, 5:06 PM IST

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு குளிர்ந்த காலநிலை நிலவிவருகிறது. இதனால் இந்த அணைப்பகுதிக்கு ஏராளமான மயில்கள் தண்ணீர் தேடி நீர்த்தேக்கப்பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இன்று பவானிசாகர் அணைக்கு வந்த மயில்கள் அங்குள்ள பகுதியில் இரை தேடின. அப்போது, மேகம் கருத்த நிலையில், குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில் அங்குள்ள பெண் மயில்களை கவர்வதற்கு ஆண் மயில் ஒன்று தோகை விரித்தாடியது. ஆண் மயில் தோகை விரித்தாடும் அழகு காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

தோகை விரித்து அழகுற நடனமாடிய மயில்

ABOUT THE AUTHOR

...view details