கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் சில தளர்வுகள் செய்யப்பட்டு மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பச்சை மண்டலமாக உள்ள சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் படையெடுத்துச் சென்றனர்.
அப்போது, பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது தாளாவடி பகுதியில் விவசாயத்தோட்டம் இருப்பதாகக் கூறி முதலில் 10 பேர் சென்ற நிலையில் திடீரென மதியத்திற்கு பிறகு தாளவாடி செல்வதாக சிலர் வந்தனர்.