தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை?…நடுவழியில் நின்ற கார்!! - erode

தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் பயன்பாட்டினால் நடுவழியில் கார் நின்றது. இதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாகன ஓட்டி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை
தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை

By

Published : May 21, 2022, 6:39 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் திடீரென சாலையில் ஓரிடத்தில் நகராமல் நின்றது. இதையடுத்து வாலிபர்கள் காரை பழுது நீக்க முயற்சித்தபோது கார் ஸ்டார்ட் ஆகாததால் அங்கு சென்ற கார் மெக்கானிக் காரில் நிரப்பப்பட்ட பெட்ரோலை பரிசோதித்தார்.

அந்தப் பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தபோது அதில் தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது காரில் வந்தவர்கள் தாளவாடி அடுத்த சூசையபுரம் பிரிவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியதாக தெரிவித்துள்ளனர்.

தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை

தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பியதால் கார் நகராமல் நின்று பழுது ஏற்பட்டதாக மெக்கானிக் தெரிவித்ததையடுத்து காரை ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளியிடம் நகைகளை பறித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!

ABOUT THE AUTHOR

...view details