ஈரோடுமாவட்டம், கொடுமுடி அருகே உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு (கொப்பரை தேங்காய்) நிலக்கடலை எள் ஆகிய பொருட்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்துகொண்டு பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
இந்த வார விலை நிலவரம்
தேங்காய் விலை (கிலோ ஒன்றுக்கு)
அதிகபட்ச விலை - ரூ.28.39
குறைந்த விலை - ரூ.24.05
சராசரி விலை - ரூ.26.69
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஏப்ரல் 21) ஒரே நாளில் தேங்காய் ஏலத்தில் 34.29 குவிண்டால் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
முதல்தர தேங்காய் பருப்பு விலை (கிலோ ஒன்றுக்கு )
அதிகபட்ச விலை - ரூ.90.25
குறைந்தபட்ச விலை - ரூ.88.55
சராசரி விலை - ரூ.88.55
இரண்டாம் தர தேங்காய் பருப்பு விலை (கிலோ ஒன்றுக்கு)
அதிகபட்ச விலை - ரூ. 87.42
குறைந்தபட்ச விலை - ரூ. 83.55
சராசரி விலை - ரூ. 85.75 என விற்பனை ஆனது.
மொத்தமாக 176.20 குவிண்டால் எடை உள்ள 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது.
எள் விலை நிலவரம்
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஈரோடு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எள் விவசாயிகள் சுமார் 412.12 குவிண்டால் எடை உள்ள 563 எள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
கருப்பு எள் ( கிலோ ஒன்றுக்கு)
அதிகபட்ச விலை - ரூ.124.92
குறைந்தபட்ச விலை - ரூ.107.40
சராசரி விலை - ரூ.117.40
சிவப்பு எள் (கிலோ ஒன்றுக்கு)
அதிகபட்ச விலை - ரூ.123.40
குறைந்த பட்ச விலை - ரூ.100.39
சராசரி விலை - ரூ.116.40
வெள்ளை எள் ( கிலோ ஒன்றுக்கு)
அதிகபட்ச விலை - ரூ.109.40
குறைந்தபட்ச விலை - ரூ.109.40
சராசரி விலை - ரூ.109.40
கொடுமுடி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை மொத்தமாக ரூ.64,11,588-க்கு ஏலம் சென்றது.
இதையும் படிங்க: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!