ஊரக உள்ளாச்சித் தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி பகுதியில், ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.13 லட்சம் பணம் இதையடுத்து காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பதும் அவர் உள்ளாட்சி தேர்தலில் திகினாரை பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக பல்பு சின்னத்தில் போட்டியிடுபவர் எனவும் தெரியவந்தது.
அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் தாளவாடி ஒன்றிய தேர்தல் அலுவலர் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சத்தியமங்கலம் சார்நிலைக் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்' - தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!