தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கசிவால் தீ விபத்து: 6 லட்சம் ரூபாய் பணம் எரிந்து நாசம்! - தீ விபத்தில் ரூ 6 லட்சம் எரிந்துநாசம்

ஈரோடு: வீட்டில் மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் எரிந்து நாசமாகியது. நல்வாய்ப்பாக வீட்டிலிருந்த சிறுவனை உயிருடன் அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.

cash-burned-in-house-fire
cash-burned-in-house-fire

By

Published : Jul 14, 2020, 3:32 PM IST

ஈரோடு மாவட்டம் கோபி பாரதிவீதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவர் மார்க்கெட் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். அவரும் அவரது மனைவியும் இன்று அதிகாலை தனது 13 வயது மகனை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு வழக்கம்போல் கடையைத் திறக்கச் சென்றனர்.

இதையடுத்து காலை அவரது வீட்டிலிருந்து புகை வெளிவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அவரது மகன் வீட்டின் கதவைத் தட்டி சத்தம் போட்டுள்ளான். அதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து சிறுவனை மீட்டனர். அப்போது வீட்டில் தீ பற்றி எரிவதைக் கண்ட அவர்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து ஏர்கூலர் மின்கசிவினால் ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வீட்டிலிருந்த 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் எரிந்து நாசமாகியது. மேலும் வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகின.

இதையும் படிங்க:விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details