தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டு வியாபாரியிடம் ரூ.4.30 லட்சம் பணம் பறிமுதல் - saththiyamangalam

சத்தியமங்கலம் அருகே உரிய ஆவணங்களின்றி வந்த இரு ஆட்டு வியாபாரிகளிடமிருந்து ரூ.4.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஆட்டு வியாபாரியிடம் ரூ.4.30 லட்சம் பணம் பறிமுதல்
ஆட்டு வியாபாரியிடம் ரூ.4.30 லட்சம் பணம் பறிமுதல்

By

Published : Mar 17, 2021, 2:46 PM IST

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பண்ணாரி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகாலிங்கலம் தலைமையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்களின்றி வந்த ஆட்டு வியாபாரி மைசூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடமிருந்து ரூ.3.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மைசூரிலிருந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு கோவையில் விற்றுவிட்டு திரும்பும்போது பிடிபட்டதாக வியாபாரி பஷீர் அகமது தெரிவித்தார். இதில், பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

ஆட்டு வியாபாரியிடம் ரூ.4.30 லட்சம் பணம் பறிமுதல்

இதேபோன்று, அன்னூரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சுப்பிரமணியம் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர்களிடமிருந்து பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நடைமுறையில் உள்ள திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details