ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகொரவம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகசுந்தரம் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இச்சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அவர் கொண்டு வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, உடனடியாக பணத்தைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சண்முகசுந்தரம் பிரபல மசால் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது.