தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் தினமும் ரூ.150 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிப்பு! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: கரோனா ஊரடங்கால் தினமும் ரூ.150 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி பாதிப்பு
தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி பாதிப்பு

By

Published : Jun 6, 2021, 4:46 PM IST

தமிழ்நாட்டில் உள்ள எட்டு லட்சம் விசைத்தறியில் நேரடியாக பத்து லட்சம் பேரும், மறைமுகமாக பத்து லட்சம் பேரும் பணி செய்கின்றனர். முன்பு தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பில், 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தியாகும். வாரத்துக்கு, 45 கோடி மீட்டர் துணி உற்பத்தியானதால், ஒரு தொழிலாளிக்கு வாரம் 3,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். தற்போது, கரோனா ஊரடங்கால் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் சுரேஷ் கூறிகையில், "தமிழ்நாட்டில் விசைத்தறி மூலம் உற்பத்தியாகும் துணிகள் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. கரோனா முதல் அலையில், மத்திய அரசு மார்ச் 22இல் தேசிய அளவில் பொது முடக்கம் அறிவித்தது.

தினமும் ரூ.150 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிப்பு

பின்னர் ஜுன் மாதம் தளர்வு அறிவித்து, விசைத்தறிகள் இயங்கின. இம்முறை வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு அறிவித்தபோது, தமிழ்நாட்டில் ஊரடங்கு இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன.

இருப்பினும், துணிகளை வடமாநிலம் அனுப்ப முடியாமல் தேங்கியது. விலையும் சரிந்தது. தற்போது தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. எனவே, துணியின் தேவை குறைந்து, விற்பனை இல்லை.

சுமார் 50 முதல் 60 விழுக்காடு துணியை மட்டுமே கடந்தாண்டு உற்பத்தி செய்தோம். இந்நிலையில் துணி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு, 2 மாதமாக, 30 விழுக்காடு துணிகள் கூட உற்பத்தியாகவில்லை. துணி உற்பத்தி பாதிப்பை ஈடுகட்டுவதும், தொழிலாளர்களுக்கு வேலையை மீண்டும் வழங்குவதும் சிரமமானது. மீண்டும் விசைத்தறி உற்பத்தி தொடங்கினாலும், பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: 'மலையாளத்தில் பேசக் கூடாது' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ABOUT THE AUTHOR

...view details