தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடிவேரி பாசன வாய்க்காலைச் சீரமைப்பது தொடர்பாக விவசாயிகளிடன் கருத்து கேட்பு கூட்டம்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கொடிவேரி அணை பாசன வாய்க்கால்கள் சீரமைப்புக்காகத் தண்ணீரை நிறுத்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Rs 144 crore allocated for repair of Kodiveri irrigation canal
Rs 144 crore allocated for repair of Kodiveri irrigation canal

By

Published : Nov 23, 2020, 9:36 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கொடிவேரி அணையிலிருந்து வெளியேறும் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கொடிவேரி அணை பாசன திட்டத்திற்குள்பட்ட தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலைப் புதுப்பித்து நவீனப்படுத்தும் திட்டத்திற்கான பணிகளைச் செய்வதற்கு அரசு ரூ.144 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீரமைப்பு பணிகளுக்காக வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரை நிறுத்த வேண்டுமென பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாசன பகுதிகளில் உள்ள 21 விவசாய கிளைச் சங்கங்களின் உறுப்பினர்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களிடம் பேசிய தலைவர் சுபி. தளபதி வாய்க்கால் கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதியை சரியான நேரத்தில் பயன்படுத்தி பயன்பெற அணைத்து விவசாய சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் வாய்கால்களில் அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள், மதகுகள், படித்துறைகள், கிளைவாய்க்கால் பிரிவுகள் மற்றும் மழைநீர் போக்கிகள் உள்ளிட்டவற்றை சரியான இடத்தில் அமைக்கவும், பணிகள் முறையாக நடைபெற விவசாயிகள் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை தற்போது நடைபெற்று வரும் முதல் போக பாசம் முடிந்த பிறகு வாய்க்கால்களை குத்தகை தாரர்களுக்கு ஒப்படைக்கலாமா? அல்லது இரண்டாம் போக சாகுபடி முடிந்த பின்னர் ஒப்படைக்கலாமா? என்றும் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் இரண்டாம் போக முடிந்த பிறகு வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டால் அடுத்தாண்டு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது நடைபெற்றுவரும் முதல் போக சாகுபடி முடிந்தவுடன் ஒரு போக சாகுபடியை கைவிட்டுவிட்டு வாய்க்கால்களின் மேம்பாட்டு பணிக்காக நான்கு மாதங்கள் தண்ணீரை நிறுத்திவைக்கலாம் என பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்படாமல், கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து ரத்து

ABOUT THE AUTHOR

...view details