ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, முத்தமிழ்செல்வன் என்பவர் டிராக்டர் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதே போல், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வடுகபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மினி லாரியில் இருந்த கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சித்திக் என்பவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள விவசாயிகளிடம் வாழைத்தார்கள் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:குடோனில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பறிமுதல்