கடந்த 2019ஆம் ஆணடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 ஏடிஎம் இயந்திரங்களில் 1 கோடியே 32 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக வங்கி அலுவலர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஏ.டிஎம்-களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரிந்த பூபாலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.