ஈரோடு பிரதான சாலையில் அன்புசெல்வன் என்பவருக்கு சொந்தமான கடன் வசூல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று வேலைக்கு வந்த ஊழியர்கள் நிறுவனத்தின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடன் வசூல் நிறுவனத்தில் கொள்ளை - சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விசாரணை! - கடன் வசூல் நிறுவனத்தில் கொள்ளை
ஈரோடு: தனியார் கடன் வசூல் நிறுவனத்தில் ரொக்கப்பணம், மடிக்கணினி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசூல் நிறுவனத்தில் திருடும்போது பதிவான காட்சிகள்
இதுகுறித்து ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அன்பு செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி: ஒரு வீட்டில் திருடப்பட்ட 5 சவரன் நகைகள், பணம்!
Last Updated : Oct 3, 2019, 8:15 AM IST