தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு தினத்தில் சாலை விபத்து: கேரளா இளைஞர் உயிரிழப்பு - Road accident

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளா இளைஞர் உயிரிழந்தார்.

கேரளா இளைஞர் உயிரிழப்பு
கேரளா இளைஞர் உயிரிழப்பு

By

Published : Jan 1, 2021, 9:10 PM IST

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் டேவிட் (21). இவரது நண்பர் ஸ்ரீ ஜு (19). இவர்கள் இருவரும் புல்லட்டில் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருவுக்குச் செல்ல சத்தியமங்கலம் வழியாகப் பயணித்தனர்.

புத்தாண்டு தினத்தில் சாலை விபத்து

அப்போது கொத்துக்காடு என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மோதியதில் வாகனத்தை ஓட்டிவந்த அலெக்ஸ் டேவிட் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த ஸ்ரீ ஜுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

புத்தாண்டு தினத்தில் சாலை விபத்து: கேரளா இளைஞர் உயிரிழப்பு

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய சேலத்தைச் சேர்ந்த கலையரசன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். புத்தாண்டு தினத்தில் நடந்த விபத்தில் கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details