தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு!

ஈரோடு: சாலை விபத்தில் சுயநினைவு இல்லாமல் கோமா நிலைக்குச் சென்ற பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, அதற்கான உத்தரவை அவசர ஊர்தியில் வந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.

ஈரோடு

By

Published : Jul 14, 2019, 10:31 AM IST

சிறுமுகை அடுத்த ராமாபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (45), மகன் பார்த்தீபன். 2016 ஜனவரி 20ஆம் தேதி விஜயலட்சுமி, பார்த்தீபன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, தொட்டிபாளையம் என்ற இடத்தில் ஊட்டியைச் சேர்ந்த சிந்தேகுண்டே என்பவரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமிக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த விபத்து குறித்த காரமடை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, தனக்கு இழப்பீடூ வழங்க வேண்டும் என சத்தியமங்கலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதிகள் காப்பீடு நிறுவனம், மனுதாரர் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சார்பு நீதிபதி பி. ஈஸ்வரமூர்த்தி, ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு ரூ. 24 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு

இந்நிலையில் அவசர ஊர்தியில் வந்த விஜயலட்சுமிக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து இழப்பீடு தொகைக்கான உத்தரவை நீதிபதிகள் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details