கோபி அருகேயுள்ள கிராமத்தில் 9 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டருகே இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகம் (72) என்பவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சிறுமி டியூசன் சென்றபோது, சண்முகம் சிறுமிக்கு செல்போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
டியூசன் வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோவில் கைது - pocso
ஈரோடு: கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபி அருகே போக்சோவில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்
பின்னர் இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர, அந்த நபர் மீது கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சண்முகத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க:கணவனை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவி - காவல் துறை விசாரணை!