ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விசைத்தறி கூடங்கள் இயங்கி வந்தன. இதனை நம்பி சுமார் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு விசைத்தறி கூடங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் 14 மணிநேரங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் 14 மணிநேரம் மட்டுமே தறிகள் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
சில நாள்கள் வேலை இல்லாத காரணத்தினால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த சிரமப்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் முன்பிருந்ததை போலவே 24 மணிநேரமும் விசைத்தறி கூடங்கள் அனுமதி அளித்து, தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறி தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க:சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!