ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவேங்கிடம் பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி, பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடந்த பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராகப் பணிபுரிந்துவந்தார்.
இதில் கடந்த ஐந்தாம் தேதி நிறுவனத்திற்கு பணிக்குச் சென்ற துரைசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து துரைசாமியின் தந்தை வீரப்பன், காணாமல்போன மகனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இந்தப் புகார் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது நிலை குறித்து தெரிவிக்காமல், அவரது இருசக்கர வாகனத்தை மட்டும் மேட்டுக்கடை வாய்க்கால்மேடு பகுதியில் இருந்ததாகக் கூறி காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சுப்புராஜ், துரைசாமி குடும்பத்தினரின் வழக்குரைஞர் இந்நிலையில் இது குறித்து இன்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து வாக்களர் அட்டையை கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணி காரணமாக ஆய்வுப் பணிக்குச் சென்றுவிட்டதால், வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்காமல் காணாமல்போன தங்களது மகனைக் கண்டுபிடித்து தரக்கேட்டும், உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகப் புகார் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க...விதை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பயன்படட்டும் - அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்