தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் ஜூன் 7ஆம் தேதிமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றிற்கு 1,200க்கும் மேற்பட்டோரும், கோபிசெட்டிபாளையத்தில் நாளொன்றிற்கு 200க்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மதியம் 2 மணிவரை மட்டும் செயல்படும்
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கோபிசெட்டிபாளையம் முழுவதும் உள்ள மருந்தகங்கள், மளிகைக் கடைகள் அனைத்தும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்க கோபிசெட்டிபாளையம் வணிகர் மற்றும் மருத்துவ சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (ஜூன் 11) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அனைத்து மளிகைக் கடைகள், மருந்தங்களுக்கும் மதியம் 2 மணி அடைக்கப்பட்டன. பெட்ரோல் சேவை, உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வணிகர், மருத்துவ சங்கம்
‘அவசியம் மருந்து மாத்திரைகள் தேவைப்படுபவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் வேண்டிய மருந்துகளை பெற்றுகொள்ளலாம் என்றும் மருத்துவரின் ஆலோசனை சீட்டு இருந்தால் மட்டுமே மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது முழு ஊரடங்கு கரோனா குறையும்வரை தொடரும்’ எனவும் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.