காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 'தமிழ்நாடு முழுவதும் நீர் மேலாண்மையைச் சிறப்பாக செய்பவர்களுக்கு என்று விருதினை காலிங்கராயன் தினத்தன்று அரசு உருவாக்கி, நீர் மேலாண்மையை மேற்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டும். இது போன்று விருதினை வழங்குவதின் மூலமாக தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும், ' காலிங்கராயன் கால்வாய் மாசடைந்துள்ளது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது கட்சியின் சார்பில் பேசி வருவதாகவும், இந்த கால்வாயை இளைஞர்கள் முன்னெடுத்து தூய்மைப் படுத்த வேண்டும்' என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.