நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா கலந்துகொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவினாசி செல்ல வேண்டியதால் கூட்டத்தை விரைவாக முடிக்க திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
ஆதி தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆ.ராசா - திமுக
ஈரோடு: சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா கலந்துகொண்டார்.
ஆனால் ராசாவை வரவேற்று பேசிய ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியதால் ராசாவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் முகம் சுளித்த அவர், தலையை வருடியபடியும், கண்ணை துடைத்தும், மீசையை தடவியபடியும் வேறு சிந்தனையில் மூழ்கினார். கூட்டத்தில் ராசாவின் செயல்களை பார்த்து புரிந்துகொண்ட அதியமான் தனது பேச்சை நிறுத்திக்கொண்டு அவரை பேசுமாறு அழைத்தார். அதனைத் தொடர்ந்து அவசரமாக பேசிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு ஆ.ராசா புறப்பட்டு சென்றார்.