சத்தியமங்கலம் பகுதியில் நேற்று (ஜூலை 18) விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போ எதிரே வந்த பைக் மீது மோதி சாலையோரம் கவிழந்தது. இந்த வித்தில் பைக்கில் வந்த பெருந்துறை விவசாயி கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மினி டெம்போவில் வந்த சிவக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விட்டு விட்டு பெய்த மழை: ஒரு நாளில் 3 விபத்துகள் - sathyamangalam accident
ஈரோடு: விட்டு விட்டு மழை பெய்ததால் சத்தியமங்கலம் பகுதியில் ஒரு நாளில் மூன்று சாலை விபத்துகள் நடந்தன.
விபத்து
இந்த விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை தக்காளி பாரம் ஏற்றிய டெம்போ எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பிரேக் போட்டதால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதேபோல், திம்பம் அடுத்த ஆசனூர் மலைப்பாதையில் வனவிலங்குகள் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த நிலக்கரி லாரி தலைகுப்புற கவிழந்தது. இதில் ஓட்டுநர், கிளீனர் காயமடைந்தனர்.