தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் திடீர் மழை - மக்கள் மகிழ்ச்சி - ஈரோட்டின் புறநகர் பகுதியில் மழை

ஈரோடு வாழ் மக்களின் ஏக்கத்தைத் தணிக்கும் விதமாக நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ஈரோட்டில் திடீர் மழை - மக்கள் மகிழ்ச்சி
ஈரோட்டில் பெய்த திடீர் மழை

By

Published : Jan 17, 2022, 12:16 PM IST

ஈரோடு: ஈரோட்டின் புறநகர் பகுதிகளான அந்தியூர், பர்கூர், வரட்டுப்பள்ளம் அணை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. கன மழையால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறும் சூழல் நிலவியது.

ஈரோடு நகரில் சோலார், லக்காபுரம் பெருந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மதிய வேளைகளில் கடும் வெயிலால் மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஈரோட்டில் மழை பெய்யாதா என மக்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.

ஈரோட்டில் பெய்த திடீர் மழை

இதனை போக்கும் விதமாக நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

யாருக்கும் இடையூறின்றி பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

ஊரடங்கு மற்றும் பொங்கல் விடுமுறை காரணமாக 4 நாட்களாக மக்கள் வீடுகளில் இருந்த சூழலில் யாருக்கும் தொந்தரவு இன்றி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details