தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை - சுமார் ரூ.51 லட்சம் பறிமுதல் - பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை

ஈரோடு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூராட்சி
பேரூராட்சி

By

Published : Dec 23, 2021, 9:27 AM IST

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3 ஆவது மாடியில் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 42 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நேற்று முன்தினம் (டிசம்பர் 21) ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் நேற்று (டிசம்பர் 22) ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், கணக்கில் வராத 51 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:அரசு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: சிக்கியது ரூ. 2.28 கோடி!

ABOUT THE AUTHOR

...view details