ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் காங்கிரஸ் எம்பி., ராகுல்காந்தி நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நெசவு தறியில் சேலை தயாரிப்பதை கூர்ந்து கவனித்த அவர், நெசவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில்," நெசவாளர்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கு வந்துள்ளேன். நாட்டில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் நிலை பலவீனமாகவுள்ளது. இதை மாற்றி உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்த நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது நெசவாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமே ஆங்கிலேயர்களிடம் எதையும் விற்காமல் மானத்துடன் வாழ்ந்துவந்ததைக் கண்டு பெருமைப்படுகிறேன்.