ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.பி. நகரின் மக்களும், வஜ்ரம் சிலம்பாட்டக் கழகமும் இணைந்து தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினர். அதில், சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர்கள்தமிழ் பாரம்பரியக் கலையான சிலம்பம் விளையாடினர்.
இதைத் தொடர்ந்து, விழாவில் நடைபெற்ற வாள் சண்டை, சிலம்பாட்ட சண்டை, பரதநாட்டியம், உறியடி, பறை இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.