ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் தண்ணீர் தேடியும், தீவனத்துக்காகவும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதைத் தடுப்பதற்காக விவசாயிகள் பலரும் 5 அடிக்கு ஒரு தூண் கல் நட்டு கம்பி வேலி அமைத்துள்ளனர்.
கல் தூண்களைப் பிடுங்கி எறிந்த ஒற்றை யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு! - elephant
ஈரோடு: கல் தூண்களைப் பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு யானை, ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் நுழைந்தது. தோட்டம் முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததால், தோட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்த யானை ஆவேசமடைந்து கம்பி வேலியை துதிக்கையால் பிடித்து ஆட்டி, பிளிறியபடியே வேலியில் இருந்த 100 தூண்களை சாய்த்து, பிடுங்கி எறிந்தது.
இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் பவானிசாகர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ராஜேஷின் தோட்டத்தில் பட்டாசு வெடித்து, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு, அதிகாலை 5 மணி அளவில் யானையைக் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.