தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புஞ்சைபுளியம்பட்டி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்! - sathyamangalam

சத்தியமங்கலம் அருகே சௌடேஸ்வரி அம்மன்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

By

Published : Feb 3, 2023, 2:53 PM IST

சத்தியமங்கலம் அருகே சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்திபெற்ற ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கலசங்கள், மேளதாளங்கள் முழங்க கோயிலுக்குள் எடுத்து வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோயில் கோபுர விமான கலசத்திற்கு சிறப்புப்பூஜைகள் செய்து, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும், கோயில் வளாகத்தில் உள்ள மற்ற தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலைச் சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சௌடேஸ்வரி அம்மனுக்கு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தங்கம் விலை திடீர் சரிவு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details