சத்தியமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புக்கு ரூபாய் 1,000 டெபாசிட்டுக்கு பதிலாக ரூபாய் 2,720 பெற்றுள்ளதாகவும், சாக்கடை தூர்வாரியது, முட்புதர்களை அகற்றிய பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - ஈரோடு சத்தியமங்கலம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறைகேடு நடைபெறுவதாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public protest at the Panchayat Union office in kothamangalam
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.