கரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறன.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் முதலில் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கின.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி வார்டு அமைத்து கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் பொதுமக்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்.
முதல் டோஸ் போட்டுக்கொண்ட நாளிலிருந்து 28 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட கமல்ஹாசன்