தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் அனுமதியுமின்றி பூங்காவை இடித்த திமுக கவுன்சிலர் மீது பொதுமக்கள் புகார் - திமுகவை சேர்ந்த கவுன்சிலராக உள்ள மோகன் குமார்

பூங்காவை இடித்து எந்த வித அனுமதியுமின்றி, தனது இல்லத்திற்கு சாலைபோட முயற்சி செய்வதாக திமுகவைச்சேர்ந்த கவுன்சிலர் மீது பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அரசின் அனுமதியுமின்றி பூங்காவை இடித்த திமுக கவுன்சிலர் மீது... பொதுமக்கள் புகார்
அரசின் அனுமதியுமின்றி பூங்காவை இடித்த திமுக கவுன்சிலர் மீது... பொதுமக்கள் புகார்

By

Published : Sep 9, 2022, 6:24 PM IST

ஈரோடுமாநகராட்சிக்கு உட்பட்ட குமரேசன் நகர் டெலிபோன் நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், சுமார் ரூ.47 லட்சம் மதிப்பில் மக்கள் பொழுது போக்கு பூங்கா கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி 20ஆவது வார்டு திமுகவைச் சேர்ந்த கவுன்சிலராக உள்ள மோகன் குமார் என்பவரின் இல்லம் இந்தப் பூங்காவின் நேர் எதிர் புறம் உள்ள நிலையில், பூங்காவை ஆக்கிரமிப்பு செய்து, அவரின் இல்லத்திற்கு மாநகராட்சியிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், பூங்காவை இடித்து பொருட்களை சேதப்படுத்தியும் சாலை அமைக்க முயற்சியும் செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தனர்.

புகார் குறித்து ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி அலுவலரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்களிடம் இப்பகுதியில் முறையாக சாக்கடை செல்வதற்கும்; மழை நீர் செல்வதற்கும் வழி வகை செய்யாத நிலையில் தனது இல்லத்திற்குப் பூங்காவை இடித்து சாலை அமைக்கும் கவுன்சிலரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

இது குறித்து பேசிய மாநகராட்சி அலுவலர்கள் பூங்காவை இடித்து, சாலை அமைக்க எந்தவித அனுமதியும் தரவில்லை என்றும்; தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். மக்களின் குறைகளைத்தீர்க்க வேண்டிய கவுன்சிலரே மக்களுக்காக இருக்கிற பூங்காவை இடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் அனுமதியுமின்றி பூங்காவை இடித்த திமுக கவுன்சிலர் மீது பொதுமக்கள் புகார்

இதையும் படிங்க:ஈரோட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை - கும்பகோணத்தில் பிடிபட்ட வாகனம்

ABOUT THE AUTHOR

...view details