ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தினகரன் என்பவர் தலைமை மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருடன் ஒகேனக்கல் சுற்றுலா சென்றுள்ளார். மேலும், மருத்துவம் படித்துவிட்டு வீட்டிலிருந்த தனது மகனை மருத்துவம் பார்க்க அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளார்.