ஈரோடு: மணல்மேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன்.09) கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்துவதற்காக ஆம்புலன்ஸ் சேவை மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஈரோடு தெற்கு தொகுதி காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், சட்டபேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.