தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்!

ஈரோடு: பவானியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும், நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

citizenship amendment act protest in Erode
citizenship amendment act protest in Erode

By

Published : Jan 3, 2020, 9:56 PM IST

மத்திய அரசு இந்திய குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் சிறுபான்மையினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் சுன்னத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உட்பட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்!

ஆர்ப்பாட்டத்தின்போது, வரும் சட்டபேரவைக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசிய நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: எனது பிறந்தநாளை கொண்டாட விருப்பமில்லை - கனிமொழி எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details