தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி - கொடிவேரி தடுப்பணை அருவிக்குச் செல்ல தடை!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு மார்ச் 31ஆம் தேதி வரை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

prohibition-to-go-to-the-kodiveri-block-falls-excited-by-tourists
prohibition-to-go-to-the-kodiveri-block-falls-excited-by-tourists

By

Published : Mar 15, 2020, 7:08 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், விடுமுறை, பண்டிகைக்காலங்களில் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருவதுண்டு.

இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதாலும், கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்திருந்திருந்தனர். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு சுற்றுலா தலங்கள், கோயில்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்ல தடைவித்துள்ளது. இந்த நிலையில், கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, மார்ச் 31ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அருவிக்கு செல்ல தடை.

இதையடுத்து கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர். அதனை தொடர்ந்து நுழைவுச்சீட்டு விநியோகமும் நிறுத்தப்பட்டு அணை நுழைவு வாயில் கதவுகளும், சிறுவர் பூங்கா கதவுகளும் மூடப்பட்டன.

திடீர் தடைவிதிப்பால், தொலைதூரத்திலிருந்து சுற்றுலா வந்தப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கொடிவேரி தடுப்பணை அருவிப்பகுதியில் விதிக்கப்பட்ட தடையால், அப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கொரோனா பீதி: ரயிலில் பயணிகளுக்கு இச்சலுகைகள் இல்லையாம்!

ABOUT THE AUTHOR

...view details