தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிரமமின்றி வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்முறை விளக்கம்! - மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம்

ஈரோடு: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமம் இன்றி தங்களது வாக்கைப் பதிவுசெய்வது குறித்தான செயல்முறை விளக்கம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

physically
physically

By

Published : Mar 20, 2021, 7:25 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்களிக்கும் முறை குறித்தான செயல்முறை விளக்கம் நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் அந்தியூர் தேர்தல் அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களது வாக்கைப் பதிவுசெய்வது குறித்து விளக்கி கூறினார். மேலும் வாக்குச்சாவடியில், வரிசையில் நிற்காமல் நேரடியாகச் சென்று வாக்களிக்கலாம் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில், மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை அலுவலர்கள் செயல் விளக்கமாகச் செய்து காண்பித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details