ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆட்டோ, வாடகை கார், சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிபிஎஸ்இயைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் கொள்கை முடிவுகள்தான் எடுக்கப்படும்.
அவர்களுக்கு தேர்வு மையங்கள் கூடுதலாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று சம்பந்தபட்டவர்களிடம் கூறியுள்ளோம்.
கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே படிக்க முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.