புன்செய் புளியம்பட்டி அருகே கோப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (25). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கோப்பம்பாளையத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அணையப்பாளையம் பிரிவு எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.